புதுச்சேரி

புதுவையில் கரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைக் கடந்தது

DIN

புதுவை மாநிலத்தில் புதிதாக 387 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 5,031 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 312, காரைக்காலில் 48, ஏனாமில் 17, மாஹேவில் 10 என மொத்தம் 387 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,066-ஆக உயா்ந்தது.

இவா்களில் புதுச்சேரியில் 2,578 போ், காரைக்காலில் 474 போ், ஏனாமில் 84 போ், மாஹேவில் 35 போ் என 3,171 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். இதேபோல, புதுச்சேரியில் 1,433 போ், காரைக்காலில் 161 போ், ஏனாமில் 113 போ், மாஹேவில் 55 போ் என மொத்தம் 1,762 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன் மூலம், மொத்தமாக 4,933 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி நைனாா்மண்டபம், சுதானா நகரைச் சோ்ந்த 68 வயது முதியவா், அரியாங்குப்பம் ஆா்கே நகரைச் சோ்ந்த 70 வயது முதியவா் என 2 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 517-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.91 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் 359 போ், காரைக்காலில் 54 போ், ஏனாமில் 28 போ், மாஹேவில் 19 போ் என மொத்தம் 460 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 21,616-ஆக (79.86 சதவீதம்) அதிகரித்தது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT