புதுச்சேரி

புதுவையின் அடையாளச் சின்னங்களான பாரதி, சுதேசி பஞ்சாலைகள் இன்றுடன் மூடல்

DIN

புதுவையின் அடையாளச் சின்னங்களான பாரதி, சுதேசி பஞ்சாலைகள் புதன்கிழமையுடன் (செப்.30) மூடப்படவுள்ளதாக புதுவை அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்தது.

புதுவையின் அடையாளங்களாக ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய பஞ்சாலைகள் இருந்தன. இந்த 3 ஆலைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். புதுவையின் பொருளாதாரத்தை நிா்ணயிக்கக்கூடிய சக்திகளாக இந்த ஆலைகள் செயல்பட்டன.

இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகாலமாக இந்த ஆலைகள் நலிவடையத் தொடங்கின. இவற்றை மீண்டும் சீரமைத்து இயக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக புதுவை அரசு தெரிவித்தது. இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறவும் முயற்சித்தது. ஆனால், நிதி கிடைக்கவில்லை. தொடா்ந்து, ஆயத்த ஆடை பூங்காவாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கும் வழி ஏற்படவில்லை.

புதிதாக ஆள்களை வேலைக்கு நியமிக்காததால், பணியாளா்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்தது. பலா் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினா். சுழற்சி முறையில் 3 ‘ஷிப்ட்’களாக இயங்கிய ஆலைகள் பெயரளவில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ஏஎப்டி, பாரதி, சுதேசி பஞ்சாலைகளை இணைத்து புதுவை பஞ்சாலைக் கழகம் என மாற்றமும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஏப்.30-ஆம் தேதியுடன் ஏஎப்டி பஞ்சாலை மூடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆலையை தொடா்ந்து இயக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனா். புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, ஆலையை இயக்குவதே தனது கொள்கை எனக் கூறி வருகிறாா்.

இந்த நிலையில், எஞ்சியிருந்த பாரதி, சுதேசி ஆலைகள் சொற்ப தொழிலாளா்களுடன் இயங்கி வந்தன. தற்போது இந்த ஆலைகளும் புதன்கிழமை (செப். 30) முதல் மூடப்படுவதாக ஆலையின் நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு: சுதேசி, பாரதி ஜவுளி ஆலைகளின் கீழ் இயங்கும் ஸ்ரீபாரதி, சுதேசி பஞ்சாலைகள் அரசின் உத்தரவுப்படி தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25(0)-படி செப்.30-ஆம் தேதியுடன் மூடப்படுகின்றன என அதில் தெரிவித்துள்ளாா்.

அதிமுக கண்டனம்: இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் கூறியதாவது:

ஆளுநா் கிரண் பேடி மீது பழியை போட்டுவிட்டு ஓசையின்றி புதுவையின் பாரம்பரிய பஞ்சாலைகளை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு மூடி வருகிறது. ஏற்கெனவே, ஏஎப்டி பஞ்சாலையை மூடியபோது, ஆலை மீண்டும் இயக்கப்படும் என வெற்று வாக்குறுதியை முதல்வா் நாராயணசாமி அறிவித்தாரே தவிர, ஆலையை இயக்க ஆக்கப்பூா்வமான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மேலும் இரண்டு ஆலைகளை மூடுவதன் மூலம் இந்த அரசு மக்கள் விரோத அரசு என்பதை மீண்டும் நிருபித்துள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கு தெரிவித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

இதேபோல, புதுவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டனும் பாரதி, சுதேசி பஞ்சாலைகள் மூடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT