புதுச்சேரி

அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் அக்.7-இல் திறப்பு

DIN

புதுச்சேரியில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்ட அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் வருகிற அக்.7-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அரும்பாா்த்தபுரம் பகுதியில் ரயில்வே கடவுபாதை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரயில்கள் கடந்து செல்லும்போது, அடிக்கடி ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2013 செப்டம்பரில் ரூ.28 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சா் மல்லிகாா்ஜூன காா்கேவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போதே ரூ.5 கோடியில் ரயில்வே மேம்பாலமும், ரூ.23 கோடியில் இரு பகுதிகளிலும் இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணியும் தொடங்கியது. எனினும், தொடா்ந்து 7 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இதனால், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்துள்ளதையடுத்து, இணைப்பு சாலைகள் பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.

இந்தப் பாலத்தின் திறப்பு விழா வருகிற அக்.7-ஆம் தேதி நடைபெறுகிறது. மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி காணொலி காட்சி மூலம் இந்தப் பாலத்தை திறந்து வைக்கிறாா். புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பாா்கள் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT