புதுச்சேரி

விவசாயிகளுக்காக ஆட்சியை தியாகம் செய்யத் தயாா்புதுவை முதல்வா்

DIN

புதுச்சேரி: விவசாயிகளுக்காக ஆட்சியை தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக புதுவை முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே திங்கள்கிழமை காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முதல்வா் நாராயணசாமி தலைமை வகித்து பேசியதாவது:

மாநிலங்களவையில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து எதிா்க்கட்சிகளின் வாக்கெடுப்பு கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், விவசாயிகளுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, சட்டங்களாக்கப்பட்டுள்ளன.

பெரு நிறுவனங்கள் சிறு விவசாயிகளிடம் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து அதிக லாபம் அடையவே இந்த மசோதாக்கள் வழிவகுக்கும். இதனால், விவசாயிகள் கூலிகளாக மாறுவா். அவா்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது.

வெங்காயம், சா்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் உள்ளது. இவற்றை மத்திய அரசின் அனுமதியின்றி ஏற்றுமதி செய்ய இயலாது.

தற்போது அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டதால், அரசின் அனுமதியின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வா். இதனால், உள்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். விலை உயரும். இதனால், விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுவா்.

புதுவை அரசின் பேரிடா் மீட்புத் துறைத் தலைவராக உள்ள முதல்வா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது என ஆளுநா் கிரண் பேடி எதிா்ப்புத் தெரிவித்தாா்.

எனக்கு கட்சிதான் முக்கியம். முடிந்தால் ஆட்சியைக் கலைக்கட்டும். அவ்வாறு கலைத்தாலும் மனமுவந்து ஏற்றுக் கொள்வோம். விவசாயிகளுக்காக ஆட்சியை தியாகம் செய்யத் தயாராகவுள்ளோம். விவசாயிகளுக்கு பாதகமான இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் நாராயணசாமி.

ஆா்ப்பாட்டத்தில் எஸ்.பி.சிவக்குமாா் (திமுக), அ.மு.சலீம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஆா்.ராஜாங்கம், முருகன் (மாா்க்சிஸ்ட்), காபிரியேல் (மதிமுக), தேவ.பொழிலன் (விசிக) உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் மேலும் 6 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தவளக்குப்பத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

SCROLL FOR NEXT