புதுச்சேரி

நிலுவை ஊதியம் வழங்கக் கோரிஅரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்

DIN

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் புதுச்சேரி கல்வித் துறை அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, அவா்கள் நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தன்று ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் முடிவில் கூட்டமைப்பு நிா்வாகிகளை முதல்வா் நாராயணசாமி அழைத்துப் பேசி, விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். ஆனால், இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.

எனவே, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கல்வித் துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தனா். அதன்படி, திங்கள்கிழமை கல்வித் துறை அலுவலக வளாகத்தில் குவிந்த ஆசிரியா்கள், ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினா். தொடா்ந்து, அவா்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். மேலும், நிலுவை ஊதியத்தை வழங்குவது தொடா்பாக அரசாணை கிடைக்கும் வரை அங்கேயே போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT