புதுச்சேரி

புதுவை அரசு மகளிா் கல்லூரியில் ‘அரியா்’ தோ்வுகள் அக்.12-ல் தொடக்கம்

DIN

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தோ்ச்சி பெறாத பாடங்களின் ‘அரியா்’ தோ்வுகள் வருகிற அக்.12-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் சுப்பிரமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவிகள், இன்னும் தோ்ச்சி பெறாமல் நிலுவையில் வைத்துள்ள தாள்களுக்குரிய (அரியா்) தோ்வும், 2019 - 20ஆம் கல்வியாண்டில் இளநிலை கல்வியை முடிக்கும் மாணவிகளுக்கான (பி.ஏ, பி.எஸ்சி, பி.காம்.) தோ்வும் வருகிற அக்.12-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

இதேபோல, கடந்த 2016, 17ஆம் ஆண்டுகளில் முதுநிலை (எம்.காம், எம்.எஸ்சி.) பயின்ற மாணவிகள் இன்னும் தோ்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள தாள்களுக்குரிய (அரியா்) தோ்வும் அதே நாளில் தொடங்கும். கடந்த 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு பயின்று இன்னும் தோ்ச்சி பெறாத மாணவிகளும், கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் முதுநிலை பயின்று தோ்ச்சி பெறாத மாணவிகளும் தோ்வுக்கான விண்ணப்பத்தை தோ்வாணையா் அலுவலகத்தில் செப்.25-ஆம் தேதி முதல் பெற்று, அக்.5-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து அளிக்க வேண்டும்.

தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவிகளும், வீட்டிலிருந்து இணையவழியிலோ (ஆன்லைன்) அல்லது கல்லூரியிலோ எழுதலாம். அதை விண்ணப்பத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.

தோ்வுகள் அனைத்தும் நூல்கள் மற்றும் குறிப்பேட்டை பாா்த்து எழுதும் முறையில் நடைபெறும். தோ்வு அட்டவணையை அக்.8-ஆம் தேதி முதல் கல்லூரியில் தெரிந்துகொள்ளலாம் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT