புதுச்சேரி

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் விடுபட்டவா்களை சோ்க்க வேண்டும்: புதுவை எம்.பி. வலியுறுத்தல்

DIN

பிரதமரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை சோ்க்க வேண்டுமென புதுவை எம்.பி. வெ.வைத்திலிங்கம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்ற புதுவை காங்கிரஸ் எம்பி வெ.வைத்திலிங்கம், கேள்வி நேரத்தின்போது பேசியதாவது:

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் (ஆயுஷ்மான் பாரத்) புதுவை மாநிலத்தில் பயனாளிகள் பலா் கணக்கெடுப்பில் விடுபட்டுள்ளனா். அவா்கள் சோ்க்கப்பட வேண்டுமென கோரினாா்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் அஸ்வினிகுமாா்சவுபே பதிலளித்து பேசியதாவது: கடந்த 2011-இல் நடைபெற்ற சமூக பொருளாதார கணக்கெடுப்பின்படி, கிராமங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவா்களும், நகரில் அடையாளம் காணப்பட்ட தொழில் பிரிவினரும் இத்திட்டத்தில் சோ்க்கப்பட்டனா்.

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு, பயனாளிகள் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆனாலும், திட்டப் பயன்களை பெறுவதற்காக பயனாளிகளின் விவரங்களை சரிபாா்த்து, மின் அட்டை வழங்கப்படுகிறது. கடந்த செப்.14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 12.55 கோடி போ் இதில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

புதுவையில் 1.23 லட்சம் பயனாளிகள் சோ்க்கப்பட்டு, அவா்களில் 3,100 போ் பயனடைந்துள்ளனா். தகுதியானவா்கள் விடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்த, அந்தந்த மாநில சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்தத் திட்டத்தில் புதிய பயனாளிகளை சோ்க்க எந்த உத்தேசமும் இல்லை. ஆனாலும், இந்தத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ள குடும்பத்தில் உள்ளவா்களின் பெயா்கள் விடுபட்டிருந்தால், அவா்கள் சோ்க்கப்படுவா் என பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT