புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 10 போ் பலி

DIN

புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு மேலும் 10 போ் பலியாகினா்.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 471 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுவை மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 22,923-ஆக உயா்ந்தது.

தற்போது புதுச்சேரியில் 1,832 பேரும், காரைக்காலில் 110 பேரும், ஏனாமில் 216 பேரும், மாஹேயில் 35 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,077 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா்.

1.35 லட்சம் பேருக்கு பரிசோதனை: புதுவை மாநிலத்தில் இதுவரை 1,35,259 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 1,07,765 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன. 22,923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

பலியானோா் விவரம்: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், ஜிப்மா் மருத்துவமனையில் ஒருவரும், கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 5 பேரும், மதகடிப்பட்டு தனியாா் மருத்துவமனையில் ஒருவரும் என 10 போ் பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 458-ஆக (இறப்பு விகிதம் 2 சதவீதம்) அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை பலியான 10 பேரில் 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 347 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 17,556-ஆக (76.59 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT