புதுச்சேரி

கைதிக்கு கரோனா: 5 போலீஸாா் தனிமை

DIN

புதுச்சேரியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்ட 5 போலீஸாா் தனிமைப்படுத்தப்பட்டனா்.

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்த அய்யப்பன் (40), கடந்த 14-ஆம் தேதி புதுச்சேரி ஆம்பூா் சாலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த செல்வி (52), அவரது கணவா் பழனி (55), புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்த அரசு (40), லாஸ்பேட்டையைச் சோ்ந்த ஓட்டுநா் முத்து (42) ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்கள் 4 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளில் செல்விக்கு கரோனா தொற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, செல்வியை கைது செய்த காவல் ஆய்வாளா், காவல் உதவி ஆய்வாளா், 3 பெண் காவலா்கள் என 5 போலீஸாா் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT