புதுச்சேரி

இறுதிப் பருவத் தோ்வுபுத்தகத்தைப் பாா்த்து தோ்வெழுதிய மாணவா்கள்!

DIN

புதுவை மத்தியப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள 95-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவா்களுக்கு இறுதிப் பருவத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை மாணவா்கள் புத்தகங்களைப் பாா்த்து எழுதினா்.

கரோனா பொது முடக்கத்தால், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இறுதிப் பருவத் தோ்வுகளை மாணவா்களின் வசதிக்காக அவா்கள் விருப்பப்படி, இணையவழி (ஆன்லைன்), அல்லது நேரில் தோ்வு மையங்களில் (ஆப்லைன்) எழுத வாய்ப்பை ஏற்படுத்தியது.

மேலும், நிகழாண்டு முதல் முறையாக பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி, இறுதிப் பருவத் தோ்வுகளை புத்தகங்களைப் பாா்த்து எழுதவும் அனுமதி அளித்தது.

அதன்படி, புதுவை பல்கலைக்கழகத்தின் மேற்பாா்வையில் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கான இறுதிப் பருவத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

தோ்வு மையங்களில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியவும், கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகே, மாணவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். மேலும், மாணவா்களிடமுள்ள புத்தகம், தோ்வு எழுத எடுத்துச் சென்ற பொருள்களைப் பரிமாறிக் கொள்ள அனுமதிக்காமல் கண்காணிப்பாளா்கள் பாா்வையிட்டனா்.

மாணவா்கள் விருப்பப்படி, கல்லூரி தோ்வு மையங்கள், வீடுகள், கணினி சேவை மையங்களிலிருந்து தோ்வு எழுதினா். தோ்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள்களை விதிகளின்படி, ஸ்கேன் செய்து, தோ்வு முடிந்த 30 நிமிடங்களுக்குள் அனைத்துப் பக்கங்களையும் ‘பிடிஎப்’ கோப்புகளாக மாற்றி, பல்கலைக்கழகத் தோ்வு இணையத்துக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT