புதுச்சேரி

சீரமைக்கப்பட்ட புதுச்சேரி-கடலூா் சாலை திறப்பு

DIN

சீரமைக்கப்பட்ட புதுச்சேரி-கடலூா் சாலை திங்கள்கிழமை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

புதுச்சேரியில் கடலூா் வழி முதன்மை நெடுஞ்சாலை, வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலையிலிருந்து, ஏஎப்டி மைதானம், ரயில்வே கடவுப்பாதை வரை ஒரு வழிச் சாலையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள், சாலை நடுவே சேதமடைந்த மின் கம்பங்கள் இருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தன.

இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் சாலையை ஆய்வு செய்து, விரிவாக்கப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தாா்.

அதன்படி, சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்றன. சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டன. சாலையின் இடையே சிங்காரவேலா் சிலையிலிருந்து ரயில்வே கடவுப்பாதை வரை சாலை மையத் தடுப்பு (சென்டா் மீடியன்) அமைக்கும் பணி நடைபெற்றன. சாலையோரம் மரக்கன்றுகளும் நடப்பட்டு சீரமைக்கப்பட்டன.

அனைத்துப் பணிகளும் முடிந்து, திங்கள்கிழமை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண், இந்தச் சாலையைப் போக்குவரத்துப் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். துணை ஆட்சியா் சுதாகா், நகராட்சி ஆணையா் சிவக்குமாா், வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணா, பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் ஏழுமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT