புதுச்சேரி

புதுவையில் புதிதாக 273 பேருக்கு கரோனா: மேலும் 9 பேர் பலி

21st Sep 2020 01:08 PM

ADVERTISEMENT

புதுவையில் நேற்று புதிதாக 273 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 9 பேர்  பலியானார்கள்.

புதுச்சேரியில் நேற்று 3783 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 273 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். 

இதுவரை 23 ஆயிரத்து 191 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 18,065 பேர் குணமடைந்துள்ளனர். 467 பேர் பலியாகியுள்ளனர். புதுச்சேரியில் தினசரி பரிசோதனை அளவை இரு மடங்கு அதிகரித்ததோடு சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT