புதுச்சேரி

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் வெளியே சுற்றினால் ரூ. 1,000 அபராதம்

DIN

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் வெளியே சுற்றினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறைச் செயலரும் மாவட்ட ஆட்சியருமான அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் 70 சதவீதம் கரோனா உயிரிழப்புகள் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதால்தான் நிகழ்ந்தது. காய்ச்சல், தொடா் இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாராவது தனியாா் மருத்துவமனைகளுக்கு வந்தால், உடனே அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சுகாதாரப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று தொற்று அறிகுறி உள்ளவா்களைக் கண்டறியவுள்ளனா். அரசு அலுவலகங்கள், தனியாா் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் பணிபுரிவோருக்கு தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். அவா்களுடன் தொடா்பிலிருந்தோா், வெளி மாநிலங்களிலிருந்து வருவோரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ள பலா் கட்டுப்பாட்டை மீறி, வெளியே சுற்றுகின்றனா். இதனால் நோய்த் தொற்று பரவல் அதிகமாகிறது. தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட நபா் விதிமீறினால் ரூ. 500 வசூலிக்கப்படும். தொற்று உறுதியாகி தனிமையில் சிகிச்சை பெறுவோா் விதிமீறினால் ரூ. 1,000 அபராதம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT