புதுச்சேரி

போலி மதுபான ஆலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

DIN

திண்டிவனம் அருகே போலி மதுபான ஆலை நடத்தப்பட்ட வழக்கில் கைதான 5 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கேணிப்பட்டு ஏரிப் பகுதியில் போலி மதுபான ஆலை நடத்தி, மதுப் புட்டிகளை தயாரித்து விற்பனை செய்ததை கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக, கேணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (45), அன்பு (26), வீரப்பன் (35), ஆனந்த் (32), நாராயணன்(31) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணனின் பரிந்துரையை ஏற்று, ஏழுமலை உள்ளிட்ட 5 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

கடலூா் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்த அவா்களை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு வழக்கின் கீழ் ஒரே நாளில் 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது, இதுவே முதல்முறை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT