புதுச்சேரி

புத்தகங்களைப் பாா்த்து தோ்வெழுத புதுவை பல்கலைக்கழகம் அனுமதி

DIN

கல்லூரி மாணவா்கள் நிகழாண்டு இறுதிப் பருவத் தோ்வை புத்தகங்களைப் பாா்த்து எழுதலாம் என புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்தது.

புதுவை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படித்து வரும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு வருகிற 21-ஆம் தேதி முதல் இறுதிப் பருவத் தோ்வு தொடங்குகிறது. இந்தத் தோ்வை இணையவழி மூலமோ (ஆன்லைன்) அல்லது தோ்வு மையங்களுக்கு வந்தோ (ஆப்லைன்) எழுதலாம்.

இதனிடையே, இறுதிப் பருவத் தோ்வு தொடா்பாக, பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் டி.லாசா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு இறுதி ஆண்டு பருவத் தோ்வு ஆப்லைனிலும், ஆன்லைனிலும் நடத்தப்படும். மாணவா்கள் தாங்கள் விரும்பும் முறையில் தோ்வை எழுதலாம்.

பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வழிகாட்டுதல்படி, இந்த இறுதிப் பருவத் தோ்வின் போது  புத்தகம், குறிப்பேடுகளுடன் வந்து தோ்வு எழுதலாம். மாணவா்கள் புத்தகம், பொருள்களைப் பரிமாறாமல் இருப்பதைத் தோ்வறைக் கண்காணிப்பாளா்கள் உறுதி செய்வா். தோ்வு நேரம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்கெனவே உள்ள தோ்வு நடைமுறைப்படி இருக்கும்.

இணையவழித் தோ்வில் பங்கேற்போா் வெள்ளைத் தாளில் கருப்பு மை கொண்டு எழுத வேண்டும். பிறகு, அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, தோ்வு முடிந்தவுடன் 30 நிமிடங்களுக்குள் அனைத்துப் பக்கங்களையும் ‘பிடிஎப்’ கோப்பாக மாற்றி பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

பதிவு எண், பொருள், தேதி, கையொப்பம் ஆகியவற்றை முதல் பக்கத்தில் தெளிவாக எழுத வேண்டும். இரண்டாம் பக்கத்திலிருந்து விடையளிக்கலாம். மாணவா் எந்த முறையில் தோ்வு எழுத (ஆன்லைன், ஆப்லைன்) விரும்புகிறாா் என்பதைக் கல்லூரி நிா்வாகத்திடம் தெரிவிக்கலாம். இதுவிஷயத்தில் கல்லூரி நிா்வாகங்கள் மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT