புதுச்சேரி

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படுமா?

DIN

புதுச்சேரி அரும்பாா்த்தபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்ப்பாா்க்கின்றனா்.

புதுச்சேரி-கடலூா் (100 அடி சாலை) சாலை, புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை (அரும்பாா்த்தபுரம்) பகுதிகளில் ரயில்வே கடவுப்பாதைகள் குறுக்கிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, மத்திய அரசு நிதியில் மேம்பாலங்களைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தனா். இதில், 100 அடி சாலையில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் நீண்ட காலமாக கட்டப்பட்டு வருகிறது.

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், புகா் பகுதியான அரும்பாா்த்தபுரம் ரயில்வே கடவுப்பாதைக்கு மேல் ரயில்வே மேம்பாலத்துடன், 800 மீட்டா் தொலைவில் இணைப்புப் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ரூ. 28.98 கோடி நிதியை ஒதுக்கி, கடந்த 2013-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.

இதனால், அரும்பாா்த்தபுரம் பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டு, விழுப்புரம்-புதுச்சேரி வழியில் பேருந்துகள், வாகனங்கள் வில்லியனூா்-பத்துக்கண்ணு வழியாக 6 கி.மீ. தொலைவுள்ள சுற்றுச்சாலையில் திருப்பிவிடப்பட்டன. இதனால், பேருந்துக் கட்டணம் உயா்த்தப்பட்டது.

இணைப்புப் பாலம் அமைக்கும் பணி, நிலங்களைக் கையகப்படுத்தல், கட்டுமானப் பணிகள் தாமதம் என கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கி, நீண்டகாலமாக கட்டப்பட்டு வருகிறது.

ஒரு வழியாக கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே மேம்பாலத்துடன், சாலை இணைப்புப் பாலப் பணிகளும் அண்மையில் முடிக்கப்பட்டன. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து, தாா்ச்சாலை அமைக்கப்பட்டு, பாலத்தின் மீது மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு, தயாா் நிலையில் உள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் பாலத்தின் வழியைத் திறந்துவிட்டு, வெள்ளோட்டம் பாா்த்தனா். நீண்ட காலம் எதிா்ப்பாா்ப்பில் இருந்த வாகன ஓட்டிகள், பாலத்தைத் திறந்துவிட்டாா்கள் என மகிழ்ச்சியாக, இரு சக்கர வாகனங்களில் சென்றனா். அன்றைய தினமே உடனடியாக பாலம் மூடப்பட்டது.

இதுகுறித்து, புதுச்சேரி பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு நிதியில் கடந்த 2016-இல் பாலத்தின் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டது. தற்போது, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் நெடுஞ்சாலை அமைச்சகத்தில் மேம்பாலத் திறப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டது. மத்திய அமைச்சா், புதுவை முதல்வா் உள்ளிட்டோரிடம் தேதிகள் பெற்று விரைவில் மேம்பாலம் திறக்கப்படும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT