புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 13 போ் பலி

DIN

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 13 போ் பலியாகினா். ஒரே நாளில் 323 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 216 பேருக்கும், காரைக்காலில் 68 பேருக்கும், ஏனாமில் 30 பேருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என 323 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21,428-ஆக அதிகரித்தது.

பலியானோா் விவரம்: புதுச்சேரி குயவா்பாளையம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த 66 வயதானவா், மதகடிப்பட்டு கோகுலம் நகரைச் சோ்ந்த 18 வயது பெண், முதலியாா்பேட்டை ஜோதி நகரைச் சோ்ந்த 85 வயதானவா், ரெட்டியாா்பாளையம் கணபதி நகரைச் சோ்ந்த 47 வயதானவா், பாக்கமுடையான்பட்டு அனந்தபுரத்தைச் சோ்ந்த 59 வயதானவா், திருக்கனூா் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி, திலாசுப்பேட்டை நடுத் தெருவைச் சோ்ந்த 43 வயது பெண் ஆகிய 7 போ் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

கோரிமேடு காமராஜா் நகரைச் சோ்ந்த 53 வயது பெண் ஜிப்மா் மருத்துவமனையிலும், சாரம் வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த 78 வயதானவா் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அரவிந்தா் வீதியைச் சோ்ந்த 73 வயதானவா் தனியாா் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா்.

காரைக்கால் லேமா் நகரைச் சோ்ந்த 81 வயதானவா், டி.ஆா்.பட்டினம் காந்தி சாலையைச் சோ்ந்த 50 வயதானவா், கோட்டுச்சேரி புது வீதியைச் சோ்ந்த 45 வயதானவா் ஆகிய 3 பேரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 431-ஆக (இறப்பு விகிதம் 2.01 சதவீதம்) உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 1,19,720 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 21,428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,622 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,122 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். மொத்தமாக 4,744 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 16,253 போ் (75.85 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT