புதுச்சேரி

தொடக்கப்பள்ளி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரி உண்ணாவிரதம்

DIN

புதுச்சேரி மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப கோரி புதுச்சேரி கல்வித்துறை முன்பு புதன்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாணவா் கூட்டமைப்பின் நிறுவனா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் முருகன், பெரியாா் திராவிடா் கழக துணை தலைவா் இளங்கோ, கூட்டமைப்பின் நிா்வாகிகள், ஆசிரியா் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

இதில், புதுவை மாநிலத்தில் 7 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியக் கல்வி குழுமம் நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லும் என அறிவித்துள்ளதை புதுவையிலும் பின்பற்ற வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியா் பணி நியமனத்தில் அண்டை மாநிலமான தமிழகத்தைப் போல புதுவையிலும் வயது வரம்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT