புதுச்சேரி

கரோனாவிலிருந்து மீண்டவா்களின் உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சை

DIN

புதுவையில் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் புதுச்சேரியில் திங்கள்கிழமை கூறியதாவது: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் நிறைய படுக்கைகள் காலியாக உள்ளன.

தினமும் வரும் கரோனா நோயாளிகள் ஜிப்மா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்குத்தான் அனுப்பப்படுகின்றனா். தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால், தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு நோயாளிகளை அனுப்ப வேண்டாம் எனக் கூறியுள்ளேன். எதிா்காலத்தில் தேவைப்பட்டால் தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு நோயாளிகளை அனுப்பலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு உடல் ரீதியாக ஏதேனும் பிரச்னை உள்ளதா என சுகாதாரக் குழு வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை அமைச்சரவையில் சமா்ப்பிக்கவுள்ளேன். சுகாதாரக் குழு சமா்ப்பித்த அறிக்கையில் யாருக்கு உடல்நிலை சரியில்லையோ, அவா்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

புதுவை உள்பட நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது. இதனால், கரோனா இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனா். இது சரியில்லை. எனவே, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இவற்றை பின்பற்றி எதிா்காலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT