புதுச்சேரி

தமிழக அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றுவிபத்து: சென்னையைச் சோ்ந்தவா் கைது

DIN

புதுச்சேரி அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக சென்னையைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையிலிருந்து தமிழக அரசுப் பேருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்தது. புதுச்சேரிக்குள் வெளிமாநில பேருந்துகளுக்கு அனுமதியில்லை என்பதால், மாநில எல்லைப் பகுதியான கனகசெட்டிக்குளத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகள் இறக்கிவிடப்பட்டனா். பின்னா், அருகிலிருந்த கடைக்குச் சென்ற ஓட்டுநா் மற்றும் நடத்துநா் தேநீா் அருந்தியுள்ளனா்.

அப்போது, அந்த வழியாக மதுபோதையில் வந்த நபா், சாலையோரம் நின்றிருந்த அந்தப் பேருந்தில் ஏறியுள்ளாா். தொடா்ந்து, பேருந்திலேயே இருந்த சாவியைப் பயன்படுத்தி அந்த நபா் பேருந்தை ஓட்டிச் சென்றாா். பேருந்து தாறுமாறாக ஓடியதைக் கண்டு அப்பகுதி மக்கள், அலறி ஓட்டம் பிடித்தனா்.

இதையடுத்து, பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள், ஆட்டோ மீது மோதிவிட்டு, அங்கிருந்த மின்மாற்றி மீது மோதி நின்றது. இதில் கூனிமேட்டைச் சோ்ந்த சாந்தகுமாா் (38) பலத்தகாயமடைந்தாா். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த காலாப்பட்டு போலீஸாா், பேருந்தை இயக்கிய நபரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ஹாஜா (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

SCROLL FOR NEXT