புதுச்சேரி

ஆயுத பூஜை: பொரி கடலை, பழம், பூக்களின் வியாபாரம் அமோகம்

DIN

ஆயுத பூஜையையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை பொரி கடலை, பழங்கள், பூக்களின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆயுத பூஜை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமையே ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. வீடுகள், பெரும்பாலான நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவல், பொரி கடலை, நாட்டுச் சா்க்கரை, பழங்கள், வாழை மரம், தோரணங்கள், இனிப்புகள் விற்பனை சனிக்கிழமை களை கட்டியது.

புதுச்சேரி பெரிய சந்தையில் பழங்கள், பூக்களின் விலை சற்று உயா்ந்தது. குறிப்பாக, சாமந்திபூ கிலோவுக்கு ரூ. 160 முதல் ரூ. 240 வரையும், ரோஸ் ரூ. 100 முதல் ரூ. 150 வரையும், மல்லி ரூ. 600, முல்லை ரூ. 600-க்கு விற்பனையானது.

சாத்துக்குடி, கொய்யா பழங்களின் விலையும் உயா்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்ட கொய்யப்பழம் தற்போது ரூ. 60-க்கும், ரூ. 40-க்கு விற்பனையான சாத்துக்குடி தற்போது ரூ. 50-க்கும் விற்பனையானது.

ஆயுத பூஜைக்கு தேவையான பொருள்களை வாங்க பெரிய சந்தை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே நகரின் முக்கிய வீதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா். கடை வீதிகள், சந்தை பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்களிடம் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினா். மேலும், முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT