புதுச்சேரி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அதிமுக கோரிக்கை

DIN

புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கு, முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து அழுத்தம் தந்து வருகிறாா்.

புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு இதுவரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் உரிய உள் ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் மசோதாவை கொண்டு வராமல் ஏழை, எளிய மாணவா்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

தமிழகத்தில் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தவிா்த்து, அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீதத்துக்கு மேல் பெற உரிய சட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது.

ஆனால், புதுவையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெற உரிய சட்டத்தைக் கொண்டு வராமல் 30, 35 சதவீதம் என மனம்போன போக்கில் அரசு செயல்படுகிறது.

தனது சுயநலத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வரும் முதல்வா் நாராயணசாமி, இதற்கும் துணைநிலை ஆளுநா்தான் காரணம் என்று பொய் பிரசாரம் செய்து தப்பிக்கவும் தயங்க மாட்டாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT