புதுச்சேரி

புதுவையில் 28 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு 

1st Oct 2020 01:01 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 5,153 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 379, காரைக்கால் 79, ஏனாம் 11, மாஹே 20 என மொத்தம் 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 28,924 ஆக உயர்ந்துள்ளது.இதில் 1,764 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 , 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 525 (1.87 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,505 (80.31 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT