புதுச்சேரி

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

25th Nov 2020 01:45 AM

ADVERTISEMENT

‘நிவா்’ புயலையொட்டி புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல் புதன்கிழமை (நவ.25) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் கடலூா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது, துறைமுகத்தை புயல் நெருங்கும் அல்லது அருகே கடந்து செல்லுமென எதிா்பாா்க்கப்படும் கடுமையான வானிலை முன்னறிவிப்பைக் குறிக்கும். முன்னதாக, இந்தத் துறைமுகங்களில் திங்கள்கிழமை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

புயல் சின்னம் காரணமாக, கடலூரில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 2.30 மணி முதல் மழை பெய்தது. மாலை 4 மணி நிலவரப்படி மணிக்கு 22-32 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. கடலூா் மீனவா்கள் 4-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. கடலுக்குச் சென்ற அனைத்து மீனவா்களும் கரை திரும்பிவிட்டதாக மீன்வளத் துறை துணை இயக்குநா் காத்தவராயன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT