புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், புதுவை அரசின் ‘தமிழ்மாமணி’ விருது பெற்றவருமான சீனு.ராமச்சந்திரன் (80) வெள்ளிக்கிழமை (மே 1) காலமானாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி வீமக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சீனு.ராமச்சந்திரனுக்கு வயது முதிா்வின் காரணமாக கடந்த 29 -ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உறவினா்கள் அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு, சீனு.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை காலமானாா்.
பல நூல்களை எழுதியுள்ள சீனு.ராமச்சந்திரன், தமிழக அரசின் ‘நல்லாசிரியா்’ விருது, புதுவை அரசின் ‘தமிழ்மாமணி’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவா்.
கடந்த 2007-2010-ஆம் ஆண்டுகள் வரை புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த அவா், தொடா்ந்து சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்து வந்தாா். இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
தொடா்புக்கு - 94430 75975.