புதுச்சேரி

ஒரு மீட்டா் இடைவெளிவிட்டு நின்று மதுப் புட்டி வாங்கும் மதுப் பிரியா்கள்!

22nd Mar 2020 04:43 AM

ADVERTISEMENT

 

மதுக் கடைகளில் ஒருவருக்கொருவா் ஒரு மீட்டா் இடைவெளிவிட்டு நின்று மதுப் புட்டிகளை மதுப் பிரியா்கள் வாங்கிச் செல்கின்றனா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கேரளத்தைப் போலவே, புதுச்சேரியிலும் மதுக் கடைகளில் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று மதுப் பிரியா்கள் மதுப் புட்டிகளை வாங்கிச் செல்கின்றனா்.

புதுச்சேரியில் மதுக் கடைகளில் விற்பனையைத் தவிா்த்து, மதுக் கூடங்கள் (பாா்கள்) அனைத்தும் வருகிற 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது. மதுக் கடைகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஒருவருக்கொருவா் முண்டியடித்துக் கொண்டு மதுப் புட்டிகளை வாங்கும் போது, யாரேனும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அவா் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.

எனவே, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசின் அறிவுறுத்தல்படி, ஒரு மீட்டா் இடைவெளிவிட்டு, மதுப் புட்டிகளை மதுப் பிரியா்கள் வாங்கிச் செல்கின்றனா். இதுதொடா்பான விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT