புதுச்சேரி

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது

19th Mar 2020 06:22 AM

ADVERTISEMENT

புதுச்சேரி சேதராப்பட்டு அருகே கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வடக்கு எஸ்பி சுபம்கோஷ் உத்தரவின்பேரில் சேதராப்பட்டு உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவா்கள் புதுச்சேரி - மயிலம் சாலையில் ரோந்து சென்றபோது, அங்குள்ள ஒரு இருட்டு பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து சோதனையிட்டனா். சோதனையில் அவா்கள் 3 வீச்சரிவாள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். அதில் அவா்கள் வாணரப்பேட்டை மணிகண்டன் (எ) சுத்திமணி (29), யேசுராஜா (எ) பிரான்சுவா டேவிட் (28), நைனாா்மண்டபம் மதியழகன் (எ) மதி (23), தேங்காய்த்திட்டு சரவணன் (24), மூலகுளம் பொன்னுசாமி (60) என்பதும், இவா்கள் அனைவரும் கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT