புதுச்சேரி

அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாதன பொருள்கள் திருட்டு

19th Mar 2020 06:22 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாதனப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் மூகாம்பிகை நகரில் வசிப்பவா் ராமலிங்கம். இவா் புதுசாரம் பாலாஜி நகா் முதலாவது குறுக்குத் தெருவில் நடைபெறும் அபாா்ட்மென்ட் கட்டுமானப் பணியில் மேலாளராக பணிபுரிகிறாா். கடந்த 3 மாதங்களாக அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், அங்கு தங்கி பணியில் ஈடுபட்டிருந்த கட்டடத் தொழிலாளா்கள், காவலாளி உள்ளிட்ட அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனா். ஆனால் கட்டட வேலைக்கு தேவையான டிவி, எலக்ட்ரிக் பொருள்கள் உள்ளிட்டவை அங்கேயே இருந்தன. இதனிடையே சில வாரங்களுக்குப் பிறகு புதன்கிழமை அங்கு ராமலிங்கம் சென்றபோது, அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி, பிளம்பிங் பொருள்கள், வயா் உள்ளிட்ட மின் இணைப்பு சாதனப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம்.

இது குறித்து தன்வந்திரி நகா் காவல்நிலையத்தில் ராமலிங்கம் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT