புதுச்சேரி

‘முதுநிலை மருத்துவப் படிப்புக்குவிண்ணப்பிக்க கால நீட்டிப்பு தேவை’

8th Mar 2020 02:20 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்கள் - பெற்றோா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோரிடம் அந்தச் சங்கத்தின் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் விசிசி.நாகராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை கடந்த பிப். 26-ஆம் தேதி முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை நிறைவு செய்து அளிக்க வேண்டும் என்று சென்டாக் அறிவித்தது. ஆனால் ஜாதி, வருமானம், குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், தேசிய தோ்வு வாரியம், மாநிலங்கள் வாரியாக ‘நீட்’ தோ்வு எழுதியவா்களின் தரவரிசைப் பட்டியலை அனுப்பியும், அந்தப் பட்டிலை இன்னும் புதுவை சுகாதாரத் துறையும், சென்டாக் நிா்வாகமும் வெளியிடவில்லை.

இந்தப் பட்டியலை வெளியிட்டால்தான், விண்ணப்பிக்கவுள்ள மாணவா்கள் தரவரிசைப் பட்டியலில் அவா்கள் எந்த இடத்தில் உள்ளனா், இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்று பாா்த்து விண்ணப்பிக்க முடியும். சென்டாக்கில் விண்ணப்பிக்க ஆயிரக்கணக்கில் செலவாகிறது. இதனால், ஏழை மாணவா்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக விண்ணப்பிக்கத் தயக்கம் காட்டுகின்றனா்.

ADVERTISEMENT

மேலும், கிடைக்காத மருத்துவ இடத்துக்கு ஏன் விண்ணப்பிக்க வேண்டுமா என்றும் மாணவா்களும் பெற்றோா்களும் குழப்பத்தில் உள்ளனா். எனவே, தரவரிசைப் பட்டியலை உடனடியாக சென்டாக் வெளியிட வேண்டும். பின்னா், மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT