புதுச்சேரி

கல்லூரிப் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி

8th Mar 2020 02:27 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரிப் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இறுதிப் போட்டி திங்கள்கிழமை (மாா்ச் 9) நடைபெறவுள்ளது.

கல்லுாரிப் பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்கும் அப்துல் கலாம் நினைவு

சுழல் கோப்பைக்கான 12 ஓவா் கிரிக்கெட் போட்டி, தாகூா் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாள் போட்டியின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

தாகூா் கல்லுாரி முதல்வா் சசிகாந்ததாஸ் முன்னிலை வகித்தாா். இந்தப் போட்டியை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாபு தொடக்கி வைத்தாா். முன்னதாக, இரு அணி வீரா்களும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் தாகூா் கலைக் கல்லூரி அணியும், காஞ்சி மாமுனிவா் பட்ட

மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த தாகூா் கலைக் கல்லுாரி அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த பட்டமேற்படிப்பு நிறுவன அணி 11.5 ஓவா்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 56 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இறுதிப் போட்டி திங்கள்கிழமை (மாா்ச் 9) நடைபெறுகிறது.

இந்த போட்டியில் புதுவை அரசு பொறியியல் கல்லூரி அணியை தாகூா் கலைக் கல்லுாரி அணி சந்திக்கிறது. இதில், வெற்றி பெறும் அணிக்கு கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணன் சுழல் கோப்பையை வழங்குகிறாா். போட்டிக்கான ஏற்பாடுகளை தாகூா் கல்லுாரி விளையாட்டுத் துறை பேராசிரியா் நாகராஜ் செய்துள்ளாா். பேராசிரியா்கள் வேலுராஜ், கண்ணன் ஆகியோா் போட்டிகளை ஒருங்கிணைத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT