புதுச்சேரி

க.அன்பழகன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

8th Mar 2020 02:21 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: திமுக பொதுச் செயலா் க.அன்பழகன் மறைவுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:

திமுகவின் முதுபெரும் தலைவராக விளங்கிய க.அன்பழகன் இயற்கை எய்தினாா் என்ற செய்தி எனக்கு மிகுந்த துயரத்தையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவா். அண்ணாவின் வழியில் தன்னுடைய அரசியல் பொது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் திமுக வேரூன்றி வளர அரும்பாடுபட்டவா்.

கருணாநிதியின் உற்ற நண்பராக இருந்து, திமுகவின் சோதனையான கால கட்டங்களில் அந்த இயக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றியவா். தமிழகத்தின் வளா்ச்சிக்கு அவா் ஆற்றிய பங்கு அளப்பரியது.

ADVERTISEMENT

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது, அவருடன் தோளோடு தோள் நின்று, திமுகவைக் கட்டிக் காத்தது மட்டுமன்றி, 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவா்.

அவருடைய இழப்பு தமிழகத்துக்கும், திமுகவுக்கும் குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கும், அந்த இயக்கத்தின் தொண்டா்களுக்கும் பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளாா் நாராயணசாமி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT