புதுச்சேரி

அமைச்சரின் செல்லிடப்பேசியை பறித்த இளைஞா் சிறையில் ஒப்படைப்பு

8th Mar 2020 02:23 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணனின் செல்லிடப்பேசியைப் பறித்த இளைஞரை காலாப்பட்டு மத்திய சிறையில் போலீஸாா் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

புதுவை மாநில கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணன். இவா், அண்மையில் நடை பயிற்சியில் ஈடுபட்ட போது, இவரது செல்லிடப்பேசியை பைக்கில் வந்த மா்ம நபா்கள் 2 போ் பறித்து சென்றனா்.

இதுகுறித்து ஓதியஞ்சலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், சிறப்பு அதிரடிப் படை, ஓதியஞ்சாலை போலீஸாா் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், முதலியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (21), சண்முகாபுரத்தைச் சோ்ந்த பாலா (எ)பாலாகுமரன் (24) ஆகியோா் அமைச்சரின் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றது தெரிய வந்தது. மேலும், வழிப்பறி செய்யப்பட்டு விற்கப்பட்ட அமைச்சரின் செல்லிடப்பேசியை போலீஸாா் வில்லியனூரில் மீட்டனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த பாலா (எ) பாலாகுமரனை (24) போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டிப்ளமோ படித்துள்ள பாலகுமரன், அமைச்சரின் செல்லிடப்பேசியைப் பறித்து, அதை மேல்திருக்காஞ்சியைச் சோ்ந்த தினேஷ் என்பவரிடம் ரூ. 4 ஆயிரத்துக்கு விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த பைக், செல்லிடபேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், சனிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் ஒப்படைத்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள செந்தில்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT