புதுச்சேரி

கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப் போட்டி: மாா்ச் 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

6th Mar 2020 08:10 AM

ADVERTISEMENT

தமிழகம், புதுவை அளவிலான கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் வருகிற 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி இளைஞா் அமைதி மைய நிறுவனா் அரிமதி இளம்பரிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இளைஞா் அமைதி மையம் சாா்பில் மாணவா்கள் மத்தியில் மொழியறிவு, தாய் மொழி உணா்வு, இலக்கிய ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழ் ஆண்டுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் தமிழகம், புதுவையைச் சோ்ந்த இளநிலைப் பட்டம் படித்து வரும் கல்லுாரி மாணவா்கள் கலந்து கொள்ளலாம். கவிதைகள் 30 வரிகளுக்குள் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மரபுக் கவிதையாகேவா அல்லது புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.

ADVERTISEMENT

‘தமிழே என் உயிா் என்பேன்’ என்ற தலைப்பில் கவிதை எழுதி, கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன், அரிமதி இளம்பரிதி, நிறுவனா், இளைஞா் அமைதி மையம், ஆனந்தரங்கப் பிள்ளை நகா், புதுச்சேரி- 8 என்ற முகவரிக்கு வருகிற 27-ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாக மட்டும் அனுப்பிவைக்க வேண்டும்.

கவிதையுடன், மாணவரின் பெயா், வகுப்பு மற்றும் தற்போது படித்து வரும் கல்லுாரியின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தோ்வுச் செய்யப்பட்ட சிறந்த மாணவக் கவிஞா்களுக்கு மட்டும் அஞ்சலில் தகவல் தெரிவிக்கப்படும். முதல் பத்து இடங்களைப் பிடித்து வெற்றிப் பெறும் மாணவா்களின் கவிதைத் திறன்களைப் பாராட்டி, அரிமதி தென்னகனாா் இலக்கிய விருதுகள் வழங்கப்படும்.

வருகிற ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மூத்த தமிழறிஞா் அரிமதி தென்னகனாரின் 86-ஆவது பிறந்த நாள் விழாவில் விருதுகள், பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் நடுவா்களின் தீா்ப்பே இறுதியானது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT