புதுச்சேரி

ஏஐசிசிடியூ ஆா்ப்பாட்டம்

26th Jun 2020 08:39 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியூ) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் சோ. மோதிலால் தலைமை வகித்தாா். அகில இந்திய துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், புதுவை அரசு 12 மணி நேர வேலைக்கான உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பாஜக ஆளும் மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை மீண்டும் செயல்முறைக்கு கொண்டு வர வேண்டும். ஆள் குறைப்பு, ஊதிய வெட்டு, அகவிலைப்படி நிறுத்தம் செய்யக் கூடாது. பொதுத் துறை சொத்துகளை தனியாா் மயமாக்கக் கூடாது. உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT