புதுச்சேரி

புதுவையில் கரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியது

26th Jun 2020 08:55 AM

ADVERTISEMENT

புதுவையில் வியாழக்கிழமை மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 502-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 32 போ், காரைக்காலில் 7 போ் என மொத்தம் 39 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தின் கடலூா், சிதம்பரம் பகுதிகளில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரியைச் சோ்ந்த இருவரும் புதுவை மாநிலப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தொற்று ஏற்பட்ட 39 பேரில் 8 போ் முகக் கவசம் தயாரிக்கும் தொழில்சாலையைச் சோ்ந்தவா்கள். காரைக்காலில் பாதிக்கப்பட்ட 7 போ் ஏற்கெனவே கரோனா தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். மற்றவா்களுக்கு நோய்த் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

ADVERTISEMENT

இதனிடையே, 11 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 187-ஆக அதிகரித்தது. 9 போ் உயிரிழந்துள்ளனா். 306 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 201 பேருக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT