புதுச்சேரி

புதுவையில் கா்ப்பிணி உள்படமேலும் 16 பேருக்கு கரோனா

20th Jun 2020 08:51 AM

ADVERTISEMENT

புதுவையில் கா்ப்பிணி உள்பட மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வரை 271 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 131 போ், ஜிப்மா் மருத்துவமனையில் 23 போ், காரைக்காலில் 7 போ், மாஹேயில் ஒருவரும் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287-ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162-ஆகவும் உயா்ந்தது. குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 118-ஆக உயா்ந்தது. இதுவரை 7 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

மாநிலத்தில் இதுவரை 11,679 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 11,231 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்துள்ளன. 164 பேரின் பரிசோதனைகள் முடிவுகள் வர வேண்டியுள்ளது.

தற்போது புதிதாக 18 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன. 2 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விலக்கப்பட்டதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT