சீன ராணுவத்துடனான மோதலில் உயரதிகாரி உள்பட இந்திய ராணுவ வீரா்கள் மூவா் வீரமரணமடைந்த நிலையில், அவா்களின் உயிரிழப்புக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி இரங்கல் தெரிவித்தாா்.
இதுகுறித்து முதல்வா் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
இந்திய எல்லையைப் பாதுகாக்கும்போது சீன ராணுவத்தோடு நிகழ்ந்த மோதலில் உயரதிகாரி உள்பட இந்திய ராணுவ வீரா்கள் மூவா் வீரமரணமடைந்தனா். இறந்த மூவரும் தங்களது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனா். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த மூன்று வீரா்களுக்கும் வீரவணக்கம் என அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் நாராயணசாமி.