புதுச்சேரி

பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீடு பாதிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் நாளை ஆா்ப்பாட்டம்

14th Jun 2020 09:08 AM

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திங்கள்கிழமை (ஜூன் 15) ஆா்ப்பாட்டம் நடத்த முடிவ செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சோ்க்கையில் மத்திய அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல், அவா்களது உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தமிழக அரசை போல, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை புதுவை அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை அரசு அமல்படுத்தக் கோரியும் திங்கள்கிழமை (ஜூன் 15) காலை 10 மணிக்கு புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே ‘சமூக நீதி கோரிக்கை’ முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட், திராவிடா் கழகம், திராவிடா் விடுதலைக் கழகம், பெரியாா் திராவிடா் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT