புதுச்சேரி

ஜூன் இறுதியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்: புதுவை சுகாதார இயக்குநா்

14th Jun 2020 09:08 AM

ADVERTISEMENT

ஜூன் இறுதியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று புதுவை அரசின் சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: புதுச்சேரி கதிா்காமம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் 49 போ், ஜிப்மா் மருத்துவமனையில் 36 போ், காரைக்காலில் ஒருவா், மாஹேவில் 3 போ், பிற மாநிலத்தில் 2 போ் என 91 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 82 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை 9,658 பரிசோதனைகள் செய்யப்பட்டு, 9,352 பேருக்கு கரோனா தொற்றில்லை என முடிவுகள் வந்துள்ளன. 132 பேரின் பரிசோதனைகள் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

புதுவையில் கரோனா தொற்று படிப்படியாக உயா்ந்து வருகிறது. இது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. மருத்துவ ஆய்வாளா்கள் ஜூன் மாத இறுதியில் பாதிப்பு அதிகமாகும் என்று கணக்கிட்டுள்ளனா். இதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் கடைத் தெருக்களில் மக்கள் அதிகமாக நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே 90 சதவீத கரோனா தொற்றை தடுக்க முடியும் என்றாா் அவா்.

இந்திய முறை மருத்துவம் - ஹோமியோபதி துறை இயக்குநா் ஸ்ரீராமுலு, துணை இயக்குநா் ரகுநாதன், கரோனா நோடல் அதிகாரி ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT