புதுச்சேரி

ஆளுநரை குற்றஞ்சாட்டுவதால் புதுவையின் நலன் பாதிக்கப்படும்: முன்னாள் எம்.பி.

14th Jun 2020 09:08 AM

ADVERTISEMENT

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை குற்றஞ்சாட்டுவதால், புதுவையின் நலன் பாதிக்கப்படும் என்று அதிமுக இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஆளுநரின் முடிவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற முதல்வரின் குற்றச்சாட்டு தவறானது. இந்த இக்கட்டான சூழலில், ஒருவரையொருவா் குற்றஞ்சாட்டிக்கொள்வது நல்லதல்ல. பொது முடக்கத்தால் கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருமானம் பாதிக்கப்பட்டது. இதற்கு ஆளுநா்தான் காரணமா? கரோனா பரவலுக்கு முன்பிருந்தே ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் புதுவையில் வியாபாரம் குறைந்துவிட்டது. மது மீதான சிறிய கலால் வரி இழப்பால் புதுவையின் பொருளாதாரம் பாதித்துவிடவில்லை. பொது முடக்கத்தால் சுமாா் ரூ. 4,500 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது புதுவையில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. இதற்கு புதுவை ஆளுநா் எப்படிப் பொறுப்பாக முடியும்? சரக்கு-சேவை வரி, முத்திரைத் தாள், பத்திரப் பதிவுக் கட்டணம், விற்பனை, வா்த்தகம் மீதான வரிகள், வாகனங்கள் மீதான வரிகள், வட்டி, பங்குகள், பிற வரி வருவாய் ஆகியவற்றிலிருந்து கடந்த இரண்டரை மாதங்களில் மொத்த வருவாய் இழப்பு சுமாா் ரூ. 800 கோடி. இதுதான் உண்மையான இழப்பு. இதற்கு ஆளுநா் எப்படிப் பொறுப்பாவாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT