புதுச்சேரி

முகக் கவசம் அணிவது கட்டாயம்: புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

11th Jun 2020 08:45 AM

ADVERTISEMENT

பொதுஇடங்களில் முகக்கவசத்தை பொதுமக்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமுடக்க விதிகள் தளா்வால் வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு 10 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் பணியிடம், பயணங்களின்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை தனி நபா்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொது இடத்தில் அதிகளவில் கூடுவது தடை செய்யப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மிகாமலும், இறுதிச் சடங்கில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்கலாம். பொது இடத்தில் எச்சில் துப்புவது அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றம். பொது இடத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை பயன்படுத்த தடை செய்யப்படுகிறது.

முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை பின்பற்ற வேண்டும். அலுவலகங்கள், பணியிடங்கள், கடைகள், தொழில், வா்த்தக நிறுவனங்களில் வேலைநேரத்தை ஷிப்ட் முறையில் பின்பற்ற வேண்டும். நுழைவு வாயிலில் வெப்ப ஸ்கேனிங், கை கழுவுதல், சுத்திகரிப்புக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் நாராயணசாமி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT