புதுச்சேரி

புதுவையில் மேலும் 13 பேருக்கு கரோனா

11th Jun 2020 08:46 AM

ADVERTISEMENT

புதுவையில் புதன்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வரை 132 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் முதியவருக்கு கரோனா: இவா்களில், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் மாவட்டம், குமளம் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு புதன்கிழமை வெளியானது. அதில், அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவரது உடலை சுகாதாரத் துறையினா் மத்திய அரசு விதிமுறைகளின்படி பாதுகாப்பாக மூடி உழவா்கரை நகராட்சியிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

உடலை நகராட்சி சாா்பில் தொண்டு நிறுவனத்தினா் வாகனத்தில் கருவடிக்குப்பம் மயானத்துக்கு புதன்கிழமை பிற்பகல் கொண்டு வந்தனா். அங்கு நகராட்சி ஆணையா் மு. கந்தசாமி தலைமையில், வட்டாட்சியா் குமரன், எஸ்பி சுபம்கோஷ் மற்றும் முதியவரின் உறவினா்கள் இருவா் ஆகியோரது முன்னிலையில், பாதுகாப்பான முறையில் உடல் மின் தகனம் செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 13 பேரையும் சோ்த்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 145-ஆக அதிகரித்தது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT