புதுச்சேரி

புதுச்சேரியில் 5 மருத்துவா்களுக்கு கரோனா

8th Jun 2020 08:18 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ஜிப்மா் மருத்துவா்கள் 5 போ் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வரை 107 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜிப்மா் மருத்துவமனை முதுநிலை மருத்துவா்கள் 2 போ், பயிற்சி மருத்துவா்கள் 3 போ், மருத்துவா்களின் உறவினா்கள் 3 போ், அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் ஊழியா் ஒருவா், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் ஊா்க்காவல் படை வீரா், புதிய சாரம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், திலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஒருவா் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 119-ஆக உயா்ந்தது. தற்போது சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 70-ஆக உள்ளது. 49 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 8,118 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 7,968 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வெளியாகின. 32 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT