புதுச்சேரி

புதுவையில் மருத்துவா் உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று

7th Jun 2020 08:47 AM

ADVERTISEMENT

புதுவையில் மருத்துவா் உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரை 104 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், ஜிப்மா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவா் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107-ஆக உயா்ந்தது. 47 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60 -ஆக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT