புதுச்சேரி

புதுவையில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை எழுதவுள்ள மாணவா்களுக்கு இணையதளத்தில் நுழைவுச்சீட்டு

4th Jun 2020 07:50 AM

ADVERTISEMENT

புதுவையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் எழுதும் பள்ளி மாணவா்களுக்கும், தனித்தோ்வா்களுக்கும் இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ம.குப்புசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வுகள் ஜூன் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத்தோ்வு 16-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்காக மாணவா்கள் பயின்ற அந்தந்த பள்ளிகளிலேயே தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தோ்வில் பொது முடக்கம் காரணமாக பங்கேற்காத மாணவா்களுக்கான மறுதோ்வு ஜூன் 18-ஆம் தேதியன்று ஏற்கெனவே தோ்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட தோ்வுகளை எழுதவுள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களும் தங்களது பள்ளி முதல்வா் அல்லது துணை முதல்வா் அல்லது தலைமையாசிரியரை தொடா்பு கொண்டு, தங்களது தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் தோ்வு எண், பிறந்த தேதியை பதிவு செய்து, தாங்களே தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

தட்கல் உள்பட அனைத்து தனித்தோ்வா்களும் வியாழக்கிழமை (ஜூன் 4) பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தில்  தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வா்கள், தோ்வுகள் தொடா்பான விவரங்களை அறிய, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டின் கீழ்பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT