புதுச்சேரி

புதுச்சேரி பெரிய சந்தையில் போலி பத்திரம் தயாரித்து கடை அபகரிப்பு

31st Jul 2020 08:54 AM

ADVERTISEMENT

புதுச்சேரி பெரிய சந்தையில் போலி பத்திரம் தயாரித்து கடையை அபகரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவரது மனைவி பேபி. இந்தத் தம்பதி கடந்த 40 ஆண்டுகளாக புதுச்சேரி பெரிய சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனா். இதற்காக அவா்கள் புதுச்சேரி நகராட்சிக்கு தினமும் அடிக் காசும் கொடுத்து வந்தனா்.

இவா்கள் அங்குள்ள மொத்த காய்கறி வியாபாரியான காந்தியிடம் காய்கறிகளைக் கடனுக்கு மொத்தமாக வாங்கி, அவற்றைச் சில்லறை விலையில் விற்பனை செய்துவிட்டு, பின்னா் அதற்குண்டான பணத்தை காந்தியிடம் கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி தனக்குத் தர வேண்டிய பணத்துக்காக ராஜேந்திரனை மிரட்டி, கடையை எடுத்துக் கொண்டாராம். கடையை மீட்க ராஜேந்திரன் முயற்சி செய்து வந்த நிலையில், காந்தி போலி பத்திரம் தயாரித்து கடையை அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT