புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கரோனா: புதுச்சேரி பேரவை மூடல்

25th Jul 2020 10:45 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா ஏற்பட்டதன் எதிரொலியாக சனிக்கிழமை பேரவை மூடப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் சட்டப்பேரவை உறுப்பினர்களின் உடல் பாதுகாப்பு கருதி சட்டப்பேரவை வளாகத்திலேயே மருத்துவ குழு வந்து சனிக்கிழமை பரிசோதனை எடுக்க இருக்கின்றனர்.இதேபோல் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் இந்த மருத்துவ பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.

சட்டப்பேரவை கூட்டம் இடமாற்றம்: சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா  ஏற்பட்டதைத் தொடர்ந்து தரை தளத்தில் இருந்த சட்டப்பேரவை அரங்கு மூடப்பட்டு, நான்காவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த ஜெயபால் இரண்டு நாள்களாக பேரவை விவாத நிகழ்வுகளில் பங்கேற்றார்.

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக பேரவை நிகழ்வுகள் இன்றுடன் முடித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT