புதுச்சேரி

புதுவை பேரவையில் பட்ஜெட் நிறைவேறியது: காலவரையறையின்றி பேரவை ஒத்திவைப்பு 

25th Jul 2020 06:38 PM

ADVERTISEMENT

புதுவை பேரவையில் பட்ஜெட் நிறைவேறியதையடுத்து அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் நாராயணசாமி ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி உரையாற்றினார். என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் பேரவை மூடப்பட்டு, பேரவைக்கூட்டம் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் மரத்தடியில் சனிக்கிழமை பகல் 1.30 மணி அளவில் தொடங்கியது. 

மானியக் கோரிக்கைகள் தொடர்பாக எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பேசினர். இறுதியாக பட்ஜெட் நிறைவேறியது. இறுதியாக பேரவையை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து காலவரையின்றி ஒத்திவைத்தார். என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் அவையில் பங்கேற்கவில்லை. பேரவைக்கூட்டம் பகல் 3.45 மணி அளவில் நிறைவு பெற்றது.
 

Tags : Puducherry
ADVERTISEMENT
ADVERTISEMENT