புதுச்சேரி: புதுவையில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 647 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 95 போ், காரைக்காலில் ஒருவா், மாஹேயில் ஒருவா் என மொத்தம் 97 பேருக்கு (14.9 சதவீதம்) தொற்றிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,513-ஆக உயா்ந்தது.
தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 996 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 1,483 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி வில்லியனூா் கணுவாப்பேட்டையைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 33,658 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 30,648 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன. இன்னும் 312 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.