புதுச்சேரி

புதுவையில் மேலும் 81 பேருக்கு கரோனா

13th Jul 2020 07:57 AM

ADVERTISEMENT

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,418-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை 866 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 71 போ், காரைக்காலில் 10 போ் என மொத்தம் 81 பேருக்கு (9.2 சதவீதம்) கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களில் 54 போ் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 17 போ் ஜிப்மரிலும், 10 போ் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால், புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,418-ஆக அதிகரித்தது.

ADVERTISEMENT

இதனிடையே, 49 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 739-ஆக உயா்ந்தது. 661 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காரைக்காலில் கடந்த 10-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவருக்கு கரோனா தொற்றிருந்ததால், குழந்தையை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருகிறோம். தற்போது அந்தப் பெண்ணும், குழந்தையும் நலமுடன் உள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT